சனி, 28 ஜூலை, 2012

அம்மா 

உன் ரத்தத்தை அருந்தி வளர்ந்தவள் நான்... 
உன் உயிரை குடித்து படித்தவள் நான் ... 
அன்று புரியவில்லை உன் பெருமை !!! 
கண் பார்வை மங்கிய போதும் காத்திருந்தாய் .. 
நான் வெற்றி வாகை சூடி வரும் அழகை காண... 
அன்று புரியவில்லை உன் பெருமை !!!
நடை தள்ளாடிய போதும் என்னுடன் நடந்தாய்...
நான் என் லட்சிய பாதையே அடைய வேண்டும் என்பதற்காக .......
அன்று புரியவில்லை உன் பெருமை !!!
இன்று தேடுகிறேன் இறைவனின் அருகில் (காலடியில் அல்ல )
சென்று விட்ட என் அன்னையின் காலடியில் ..
என் சிறு சாதனைகளை சமர்பிக்க !!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக